மேலும் செய்திகள்
ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,ல் தொழில்நுட்ப கருத்தரங்கு
24-Sep-2024
புதுடில்லி : தமிழகத்தில், 12 நகரங்களின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்புக்கு மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கு ருத்ராபிஷேக் என்டர்பிரைசஸ் எனும் ஆர்.இ.பி.எல்., நிறுவனம், மாநில அரசின் ஆர்டரைப் பெற்றுள்ளது.ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியியல் தகவல் அடிப்படையிலான நடைமுறையின்கீழ், 12 நகரங்களுக்கு, 'அம்ருத் 2.0' துணை திட்டத்தின்படி மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கு, தமிழக அரசின் நகர திட்டமிடல் இயக்குனரகமான டி.டி.சி.பி., ஆர்டர் வழங்கியுள்ளதாக, ஆர்.இ.பி.எல்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பத்தில் நிலையான, நீடித்த வளர்ச்சிக்கான திட்டம் தயாரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. தேனி அல்லிநகரம், வால்பாறை, உதகமண்டலம், கம்பம், போடிநாயக்கனுார் மேட்டுப்பாளையம் ஆகியவை முதலாவது தொகுப்பில் இடம்பெற்றுள்ள நகரங்களாகும். இடைப்பாடி, உடுமலைப்பேட்டை, கோபிசெட்டிப்பாளையம், தாராபுரம், மேட்டூர், பொள்ளாச்சி ஆகிய நகரங்கள், தொகுப்பு ஐந்தின் கீழ் மாஸ்டர் பிளான் தயாரிப்பட உள்ள நகரங்களாகும்.இந்த நகரங்களின் தற்போதைய நிலவரத்தை மதிப்பிட்டு, வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டு அதன் அடிப்படையில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும். பேரிடர் மேலாண்மை, வீட்டு வசதி, நகர கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான, நீடித்த, நிலையான நகரமைப்புக்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும் என, ஆர்.இ.பி.எல்., நிறுவன தலைவர் பிரதீப் மிஸ்ரா தெரிவித்துஉள்ளார். தமிழக அரசின் இந்த ஆர்டர் மட்டுமின்றி, மதுரை ஸ்மார்ட் சிட்டி, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம், சென்னை வெளிவட்டச் சாலை வளர்ச்சி வழித்தடம், சென்னையில் தெருவோர வணிகத்திற்கான திட்டம் உள்ளிட்ட மாநில, மத்திய அரசுகளின் ஆர்டர்களையும் ஆர்.இ.பி.எல்., பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
24-Sep-2024