உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க., கவுன்சிலரை தாக்கிய மாணவர் கைது

அ.தி.மு.க., கவுன்சிலரை தாக்கிய மாணவர் கைது

இடைப்பாடி: அ.தி.மு.க.,வை சேர்ந்த, இடைப்பாடி நகராட்சி கவுன்சிலர் முருகன். இவர், வெள்ளாண்டிவலசில் இருந்து, அவரது வீடு உள்ள ஆலச்சம்பாளையத்துக்கு நேற்று காரை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். இரவு, 7:15 மணிக்கு இடைப்பாடி, ராஜாஜி சிலை அருகே காரை நிறுத்தினார். சிறிது நேரத்தில் காரை எடுக்க பின்புறமாக இயக்கினார். அப்போது நடந்து வந்த, பெருந்துறை பொறியியல் கல்லுாரியில், 2ம் ஆண்டு மாணவர்களான, இடைப்பாடி, சின்னமணலி திருமுருகன், 19, கவுண்டம்பட்டி, சக்தி நகர் ஜோதிபிரகாஷ், 19, ஆகியோர், காரை நிறுத்தச்சொல்லி தட்டினர். இதில் காரை விட்டு இறங்கிய முருகனுக்கும், மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்கள், முருகன் முகத்தில் கையால் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. அவர், இடைப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அ.தி.மு.க.,வினர், இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் குவிந்தனர். தொடர்ந்து முருகன் புகார்படி, இடைப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து திருமுருகனை கைது செய்து, ஜோதி பிரகாஷை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை