மேலும் செய்திகள்
கார் மோதி பெண் பலி
14-Aug-2025
தாரமங்கலம், தாரமங்கலம் அருகே மோட்டுப்பட்டியை சேர்ந்த கட்டட தொழிலாளி வையாபுரி. இவரது மூத்த மகன் ஹரின், 12. அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நேற்று மாலை, டியூசன் செல்ல, வீடு அருகே, சாலை வளைவில் ஓரமாக நின்றிருந்தார். அப்போது வந்த டாரஸ் லாரி, மாணவர் மீது மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார். லாரியை விட்டு, டிரைவர் தப்பி ஓடிவிட்டார். ஆத்திரமடைத்த மக்கள், லாரி கண்ணாடியை உடைத்தனர். தாரமங்கலம் போலீசார் லாரியை கைப்பற்றி, எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த டிரைவர் பழனிகுமாரை பிடித்து விசாரிக்கின்றனர்.
14-Aug-2025