20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலி
சேலம்: கோவை மாவட்டம், அன்னுாரை சேர்ந்தவர் தயாழிதன், 19. இவர், அங்குள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். கல்லுாரி விடுமுறை நாட்களில் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.கடந்த, 17ல் சோலார் பேனல் அமைப்பதற்கு, சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்தார். அங்கு சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். 20 அடி உயர கட்டடத்தின் மேல் ஏறி, சோலார் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது தடுமாறி தவறி விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். அஸ்தம்பட்டி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.