உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் குளிக்க முயற்சி மாணவர் மூழ்கி பலி

கிணற்றில் குளிக்க முயற்சி மாணவர் மூழ்கி பலி

ஓமலுார், ஓமலுார், பஞ்சுகாளிப்பட்டியை சேர்ந்தவர் கீர்த்தனா, 35. இவரது கணவர் கமல்குமார், 38. இவர்களது மகன் ஜெய் ஆகாஷ், 13. இவர் பஞ்சுகாளிப்பட்டி அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி செல்லாத ஜெய் ஆகாஷ், வீடு அருகே, தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க இறங்கினார். அப்போது அவரது தங்கை தனிஷ்காஸ்ரீ, 8, நின்று பார்த்துக்கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத ஜெய் ஆகாஷ், மூழ்கிவிட்டார். தனிஷ்காஸ்ரீ, வீட்டுக்கு சென்று, தாயிடம் தெரிவித்தார். பின் மக்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவன் இறந்தது தெரியவந்தது. ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை