பள்ளிக்கு புறப்பட்ட மாணவன் மாயம்
சேலம்: சேலம், வட அழகாபுரம் கணக்கு பிள்ளை தெருவை சேர்ந்தவர் ராஜகணேஷ் மகன் பிரவீன், 13. அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல, பள்ளிக்கு சென்ற பிரவீன் வீடு திரும்பவில்லை. இதனிடையே பள்ளியில் இருந்து பிரவீனின் தாய்க்கு, தொலைபேசி மூலம் பள்ளி நிர்-வாகம் சார்பில் அழைப்பு வந்துள்ளது. அதில் தங்கள் மகன் பிரவீன் பள்ளிக்கு வரவில்லை, ஏன் அனுப்பவில்லை என கேட்-டுள்ளனர். அதிர்ச்சியடைந்த தாய், பள்ளி சென்று பார்த்தபோது பிரவீன் இல்லாதது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை இது குறித்து, அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.