சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா
தாரமங்கலம் புரட்டாசி கிருத்திகையை ஒட்டி, தாரமங்கலம் சுப்ரமணியர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதில் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, சந்தனகாப்பு, பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.இரவு, 7:00 மணிக்கு மேல், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், பூக்கள் அங்காரத்தில், திருவீதி உலா தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியே, 'அரோகரா' கோஷம் முழங்க சென்ற பக்தர்கள், கோவிலில் நிறைவு செய்தனர்.