சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க பழங்குடி மக்களுக்கு மானியம்
பனமரத்துப்பட்டி, சாமகுட்டப்பட்டி, அடிமலைப்பட்டியில், 40 விவசாயிகளுக்கு, மலைக்கிராமங்களில் சிறுதானியம் சாகுபடி செய்ய, மானியத்தில் விதை தொகுப்பு வழங்கப்பட்டது.இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத் கூறியதாவது:மலைக்கிராமங்களில் சிறுதானியம் சாகுபடி செய்யும் பழங்குடியின விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சாமை, தினை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு, 1,600 பின்னேற்பு மானியம், 100 சதவீத மானியத்தில், சிறுதானிய விதை தொகுப்பு வழங்கப்படும். அதன்படி தற்போது, சாமகுட்டப்பட்டி, அடிமலைப்பட்டியில், 40 விவசாயிகளுக்கு விதை தொகுப்பு வழங்கப்பட்டது. பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 200 ஏக்கர் இலக்கு நிர்ணயித்து, இதுவரை, 100 ஏக்கருக்கு வழங்கப்பட்டது. மலைவாழ் பழங்குடியின விவசாயிகள், பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.