மே 23 முதல் 29 வரை ஏற்காட்டில் கோடை விழா
சேலம்:சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 48வது கோடை விழா, மலர் கண்காட்சி மே 23 முதல் 29 வரை நடக்க உள்ளது. அண்ணா பூங்காவில், 1.50 லட்சம் மலர்களால் கண்காட்சி அமைக்கப்படுகிறது. மேட்டூர் அணை உள்ளிட்ட வடிவங்கள், மலர்கள், காய்கறியால் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்படும். 25,000க்கும் மேற்பட்ட வண்ணமலர் தொட்டிகள் இடம்பெறும். சுற்றுலா துறை சார்பில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.