உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சேலம்: மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, சேலம் கலெக்டர் அலு-வலகத்தில், அவரது படத்துக்கு, கலெக்டர் பிருந்தாதேவி தலை-மையில் அலுவலர்கள், மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். அதேபோல் சேலம் மாநகராட்சியில் மேயர் ராமச்சந்திரன், கமி-ஷனர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் கவுன்சிலர்கள், பணியாளர்கள், தீண்டாமை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றனர். மேலும் சேலத்தில் உள்ள காந்தி சிலைகளுக்கு, பல்வேறு அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்-தினர்.அதேபோல் சங்ககிரி, தேவண்ணக்கவுண்டனுார் ஊராட்சி ஒன்-றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் முருகன்(பொ) தலைமை வகித்து, தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை வாசிக்க, மாண-வர்கள் ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ