உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

சேலம், சேலம் விநாயகா மிஷனின், 'விம்ஸ்' வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில், மாணவ சங்க பேரவை மூலம், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பேராசிரியர்களை, மாணவ, மாணவியர், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து, விழா ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்கள் திறன்களை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். டீன், பேராசிரியர்களுக்கு, மாணவர்கள், நினைவு பரிசுகளை வழங்கினர். மேலும் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை