உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வட்டார கல்வி அலுவலர்களை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வட்டார கல்வி அலுவலர்களை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தலைவாசல்:தலைவாசல் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று தலைவாசல் வட்டார கல்வி அலுவலர், அலுவலக பணியாளர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலர் திருமுருகவேள் தலைமை வகித்தார். இதில், 'ஈராசிரியர் பள்ளியில், உதவி ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு வழங்காமல், ஆசிரியரே பணி நீட்டிப்பு வேண்டாம் என்று கூறியதாக கடிதம் பெறுகின்றனர். ஆசிரியர்களின் மாதந்திர குறைதீர்ப்பு கூட்டத்தில் வழங்கப்படும் விண்ணப்பங்களுக்கு அலுவலர், பணியாளர்கள் பதில் வழங்குவதில்லை. பெண் ஆசிரியர்களை குறைகள் கூறி மிரட்டுகின்றனர்' உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் பெரியசாமி, மாநில மகளிர் அணி செயலர் ஷண்முகவடிவு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய செயலர் அருணாச்சலம், நிர்வாகிகள் ராஜா, கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ