உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தேர்வு

சேலம்:தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, சேலம் மாவட்ட புது நிர்வாகிகள் தேர்வு நேற்று நடந்தது. தலைவராக சசி அறிவழகன், செயலராக ரமேஷ்பாபு, பொருளாளராக அறிவழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, மாநில முன்னாள் பொதுச்செயலர் கோவிந்தன், வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; ஈட்டிய விடுப்பு மற்றும் ஊக்க ஊதியங்களை உடனே வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் இயற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை