உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வலி நிவாரண மாத்திரை விற்ற வாலிபர் கைது

வலி நிவாரண மாத்திரை விற்ற வாலிபர் கைது

வலி நிவாரண மாத்திரைவிற்ற வாலிபர் கைது சேலம், செப். 28-சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில், போதை மாத்திரை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்,சேலம், கிச்சிபாளையம் குறிஞ்சி நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, கிச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் தீவிரமாக கண்காணித்த போது, சந்தேகப்படும்படி இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முருகன், 35, என்றும் அவரிடம், 270 போதை மாத்திரை இருந்ததும் தெரிந்தது.ஆன்லைன் மூலமாக மாத்திரைகளை வாங்கி ஒரு மாத்திரையை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். முருகனின் மனைவி அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால், ஆன்லைன் மூலமாக வாங்கி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. முருகனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த, 270 மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை