கோவில் நில அளவீடு பணி தொடக்கம்
பனமரத்துப்பட்டி, மல்லுார், சுனைக்கரட்டில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. அக்கோவிலுக்கு, அதன் கரட்டை சுற்றி நிலங்கள் உள்ளனஅந்த நிலங்களை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற, அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று, செயல் அலுவலர் அனிதா முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு பணி தொடங்கி மதியம் வரை நடந்தது. தொடர்ந்து இன்றும் அளவீடு பணி நடக்க உள்ளது.