உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லஞ்சம் கேட்ட விவகாரம்; எஸ்.எஸ்.ஐ., இடமாற்றம்

லஞ்சம் கேட்ட விவகாரம்; எஸ்.எஸ்.ஐ., இடமாற்றம்

தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுாரை சேர்ந்தவர் மகேந்திரன். இவர், விபத்து வழக்கு தொடர்பாக, சில நாட்களுக்கு முன், அதன் அறிக்கை கேட்டு வீரகனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.அப்போது, அறிக்கை வழங்குவதற்கு பணம் கேட்டனர். ஏற்கனவே, 3,000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், மேலும், 1,000 ரூபாய் வேண்டும் என, எஸ்.எஸ்.ஐ., பழனிவேல் கேட்டதாக புகார் எழுந்தது.இதனால் அவர், லஞ்சம் கேட்கும் ஆடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதுதொடர்பாக, சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் விசாரித்தார். தொடர்ந்து, எஸ்.எஸ்.ஐ., பழனிவேலை, நேற்று முன்தினம் சேலம் ஆயுதப்படைக்கு இடமாற்றி எஸ்.பி., உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ