/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாலியல் புகாரை மறைத்த விவகாரம் ஹெச்.எம்., உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
பாலியல் புகாரை மறைத்த விவகாரம் ஹெச்.எம்., உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்துார் அருகில் ஒரு அரசுப்பள்ளியில், மாணவி ஒருவருக்கு, மூன்று மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில், ஆத்துார் மகளிர் போலீசார் மூன்று மாண-வர்களை கைது செய்து, சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.முன்-னதாக பாலியல் தொல்லை குறித்து புகார் தந்தும், நடவடிக்கை எடுக்காததுடன், புகாரையும் மறைத்ததால், தலைமை ஆசிரியர் முத்துராமன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், பானுப்பிரியாவை மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆனால், சொந்த ஜாமினில் உடனடியாக விடுவித்ததால், துறை ரீதியான நடவடிக்கையில் இருந்து மூவரும் தப்பினர். இந்நிலையில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினார். மூவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.