உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., ஆட்சியை கவிழ்க்கஅமைச்சர் பேசியதே போதும்

தி.மு.க., ஆட்சியை கவிழ்க்கஅமைச்சர் பேசியதே போதும்

மேட்டூர்:மேட்டூர் சட்டசபை தொகுதி, வீரக்கல்புதுார், பி.என்.பட்டி, மேச்சேரி, கொளத்துார் டவுன் பஞ்சாயத்துகளின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், வீரக்கல்புதுார், நங்கவள்ளி சாலையில் நேற்று நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து பேசுகையில், ''தி.மு.க., அமைச்சர் மேடையில் ஆபாசமாக பேசியதால், தமிழக பெண்கள் கோபத்தில் உள்ளனர். தி.மு.க., ஆட்சியை எதிர்க்கட்சி கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை. ஆளுங்கட்சி அமைச்சர் பொன்முடி மேடையில் பேசியதே போதும். வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும், இ.பி.எஸ்., முதல்வராவார்,'' என்றார். முன்னதாக அமைப்பு செயலர் செம்மலை பேசினார். ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, ஜெ., பேரவை மாநில துணை செயலர் கலையரசன், டவுன் பஞ்சாயத்து செயலர்கள் வெங்கடாசலம், குமார், ராஜரத்தினம், மோகன்குமார், ஒன்றிய, அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை