உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் மிதந்த ஆப்ரேட்டர் சடலம்

கிணற்றில் மிதந்த ஆப்ரேட்டர் சடலம்

கொளத்துார் : கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி கோட்டையூர் அடுத்த நாயம்பாடியை சேர்ந்த, கிரேன் ஆப்ரேட்டர் சோமன், 55. இவருக்கு மனைவி ரஞ்சிதம், 45, ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த, 6ல் வீட்டை விட்டு வெளியேறிய சோமன், பின் திரும்பவில்லை. மனைவி, மகன் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு அருகே உள்ள விவசாய கிணற்றில், சோமன் சடலம் மிதந்தது. அவரது சடலத்தை மேட்டூர் தீயணைப்பு ழுவினர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !