உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழாய் உடைந்து ஆறாக ஓடிய குடிநீர்

குழாய் உடைந்து ஆறாக ஓடிய குடிநீர்

மேட்டூர்:மேட்டூர், தொட்டில்பட்டி காவிரி கரையோரம், காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் உள்ளது. அதன்மூலம் தினமும், 3 கோடி லிட்டர் குடிநீர் எடுத்து காடையாம்பட்டி, ஓமலுார் தாலுகாவில் உள்ள நகரங்கள், கிராமங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மேட்டூர் - தொப்பூர் நெடுஞ்சாலையில் மேட்டூர் அணை உபரிநீர் செல்லும் பாலத்தின் ஒரு பகுதியில் உள்ள காடையாம்பட்டி திட்ட குழாயில் நேற்று மாலை, 5:00 மணிக்கு உடைப்பு ஏற்பட்டது. ஏற்கனவே குழாயில் சென்று கொண்டிருந்த குடிநீர் பின்னால் வந்து, உடைப்பு வழியே பீறிட்டு வெளியேறி நெடுஞ்சாலையில் ஆறாக ஓடியது.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் வாரிய அலுவலர்கள், வினியோகத்தை நிறுத்தி, உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். கடந்த, 2ல் அதே பாலத்தில் காடையாம்பட்டி திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் ஆறாக ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி