அரசு பணிகளை செய்யாதவர்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள்
ஆத்துார்: ''அரசு பணிகளை செய்யாதவர்கள், வேலையை ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள்,'' என, ஆத்துார் நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர் தங்கவேல் பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று, தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:காங்., கவுன்சிலர் தேவேந்திரன்: ஆத்துாரில், மத்திய அரசு சார்பில் சிறுபான்மையினர் கல்லுாரி அமைப்பதற்கு, ஒப்புதல் தெரிவித்-துள்ளது. கல்லுாரி அமைக்க ஐந்து ஏக்கர் இடம் ஒதுக்கி தர வேண்டும்.நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபா கமால்: இடம் குறித்து ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கப்படும்.அ.தி.மு.க., கவுன்சிலர் உமாசங்கரி: ஆத்துாரில் தெரு நாய் தொல்லை அதிகளவில் உள்ளது. சாக்கடைகளில் மருந்து தெளிக்-காததால், பட்டை புழுக்கள் அதிகமாக காணப்படுகிறது. சுகாதார சீர்கேடு, கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், மருந்து தெளிக்கப்பட்ட நிலையில், தற்-போது அப்பணிகள் மேற்கொள்வதில்லை.கமிஷனர் சையதுமுஸ்தபா கமால்: சாக்கடை துார் எடுத்து சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., கவுன்சிலர் தங்க வேல்: நகராட்சி அலுவலர்களிடம், எந்த வேலை சொன்னாலும் சரிவர பணிகள் மேற்கொள்வ-தில்லை. பணிகளை சரி செய்தால் தான், அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தும் வகையில், சரி-வர வேலை செய்யாதவர்கள் யாராக இருந்தாலும் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள். கூட்டத்திற்கு வந்தோமா, சென்-றோமா என்று யாருமே இருக்காதீர்கள்.கமிஷனர் சையதுமுஸ்தபா கமால்: பணிகள் அனைத்தும் மேற்-கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.