ஏற்காடு மலைப்பாதையில் சாலையின் குறுக்கே விழுந்த மூன்று மரங்கள்
ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அப்போது மழை பெய்து வருகிறது. ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 60 அடி பாலம் அருகில் அடுத்தடுத்து 3 மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் வாகனங்கள் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x9gk8w74&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மரம் அறுக்கும் இயந்திரம் இல்லாததால் சாலையின் ஒரு பகுதியில் இருந்த மரத்தை அரிவாளால் வெட்டி அப்புறப்படுத்தி தற்காலிகமாக வாகனங்கள் சென்று வர வழி செய்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மரம் அறுக்கும் இயந்திரத்தை கொண்டு வந்து மரங்களை முழுவதுமாக அப்புறப்படுத்தினர்.