உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மா மரங்களில் கவாத்து அதிக மகசூலுக்கு அறிவுரை

மா மரங்களில் கவாத்து அதிக மகசூலுக்கு அறிவுரை

சேலம்: சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் சக்கரவர்த்தி அறிக்கை:சேலம் மாவட்டத்தில், 6,048 ஹெக்டேரில், 'மா' சாகுபடி முடிந்த நிலையில், செப்டம்பரில், மா மரங்களுக்கு கவாத்து மேற்-கொள்வதன் மூலம், புது தளிர்கள் உருவாகி காய்க்கும் கிளை-களின் எண்ணிக்கை அதிகமாகி உற்பத்தி திறன் அதிகரிக்கும். கவாத்து மேற்கொள்வதால், மகசூல் அதிகம் கிடைப்பதோடு, பூச்சி, நோய் தாக்குதல் வெகுவாக குறையும். அத்துடன் ஒன்றின் மேல் ஒன்றாகவும், குறுக்காகவும் வளர்ந்த கிளைகள், உலர்ந்த பலவித கிளைகளை, 3 ஆண்டுக்கு ஒருமுறை அகற்ற வேண்டும். தேவைக்கு அதிகமான கிளைகளை அகற்றுவதன் மூலம், இடு-பொருட்களின் தேவையும் குறைகிறது. கவாத்து தொடர்பான சந்-தேகங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவ-லகத்தை அணுகி விபரம் பெறலாம். விவசாயிகள் உரிய காலத்தில் மா மரங்களில் கவாத்து செய்து பயன்பெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை