உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆம்புலன்ஸில் புகையிலை கடத்தியவர் கைது

ஆம்புலன்ஸில் புகையிலை கடத்தியவர் கைது

மேட்டூர், நவ. 9-கொளத்துார் காரைக்காடு சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன்மலையில் இருந்து வந்த, மாருதி ஆம்னி ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில் கர்நாடக மாநிலம் அனுாரில் அடையாளம் தெரியாதவர்களிடம் வாங்கி, விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிந்தது. இதனால் ஆம்புலன்ைஸ ஓட்டி வந்த, மேட்டூர், காவேரிபுரம், தெலுங்கனுாரை சேர்ந்த சக்திவேல், 27, என்பவரை, கொளத்துார் போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்கள், வாகனத்தை பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை