உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலையை ஆக்கிரமித்து கழிப்பறை பணி; பள்ளம் தோண்டி மக்கள் போராட்டம்

சாலையை ஆக்கிரமித்து கழிப்பறை பணி; பள்ளம் தோண்டி மக்கள் போராட்டம்

கெங்கவல்லி : கெங்கவல்லி அருகே உலிபுரத்தை சேர்ந்த சந்திரசேகர் மனைவி ஜெயக்கொடி, 40. இவர் வீடு அருகே, சாலை பகுதியில் கழிப்பறை கட்ட, அடித்தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து சாலையின் மற்றொரு பகுதியில் பள்ளம் தோண்டி போராட்டம் நடத்தினர். கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் தம்மம்பட்டி போலீசார், இருதரப்பினரிடமும் பேச்சு நடத்தினர். அப்போது, பள்ளத்தை மூடும்படி அறிவுறுத்தினர். அதற்கு மக்கள், 'சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கழிப்பிட அடித்தள பணியை அகற்ற வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.பின் போலீஸ் பாதுகாப்புடன், 'பொக்லைன்' உதவியுடன் கழிப்பறை கட்டுமான பணி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தொடர்ந்து மக்கள் தோண்டிய பள்ளத்தை மூடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை