உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பனிப்பொழிவால் வரத்து குறைந்து தக்காளி விலை உயர்வு

பனிப்பொழிவால் வரத்து குறைந்து தக்காளி விலை உயர்வு

ஆத்துார்: ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, கல்வரா-யன்மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தக்-காளி, வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறி, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. சில நாட்களாக பனிப்பொழிவு, குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் கிலோ, 35 -முதல், 40 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இரு நாட்களாக, 60 முதல், 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவும் சில்லரை விற்ப-னையில், கிலோ, 80 ரூபாய் வரை விற்கப்படுகி-றது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஆத்துார், கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி பகு-திகளில் இதுவரை இல்லாத அளவு பனிப்பொ-ழிவு காணப்படுகிறது. மாலை முதல் விடிய விடிய அதிகாலை வரை, பனி அதிகளவில் உள்-ளதால் செடிகளில் பூ பிடிப்பது, தக்காளி பெரிதா-வது சற்று தாமதமாகியுள்ளது. 3 மாதங்களாக தக்காளி விலை குறைவால், 3ல் ஒரு பாக விவ-சாயிகள், தக்காளி பயிரிடவில்லை. இதனால் வரத்து, தற்போது ஒரே நேரத்தில் குறைய விலை உயர்ந்-துள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை