உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை விஷ்ணுபதி புண்யகால பூஜை

நாளை விஷ்ணுபதி புண்யகால பூஜை

வீரபாண்டி: சேலம் விஷ்ணுபதி பூஜை கமிட்டி சார்பில் வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாத பிறப்புகளில் பழமையான கோவில்களில் விஷ்ணுபதி புண்ய காலத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. அதன்படி கார்த்திகை பிறப்பான நாளை, அயோத்தியாபட்டணம் அருகே மின்னாம்பள்ளி வைத்தியராமர் கோவிலில் அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி யாகத்துடன் விஷ்ணுபதி புண்யகால பூஜை நடக்க உள்ளது. அதில் உலக நன்மை வேண்டி, மகா சுதர்சன யாகம், தன்வந்திரி யாகம், மிருத்யுஞ்சய யாகம், பார்வதி சுயம்வரா யாகம் உள்பட, 11 வகை யாகங்களுடன் சிறப்பு பூஜை செய்யப்படும். இதில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படும் என, கமிட்டியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை