நுழைவுச்சீட்டுக்கு கூடுதல் கவுன்டர் சுற்றுலா பயணியர் வலியுறுத்தல்
மேட்டூர்: மேட்டூர் அணை பூங்காவை பார்வையிட, நேற்று ஏராளமான சுற்-றுலா பயணியர் குவிந்தனர். காலை, 11:00 மணிக்கு, மேட்டூர் - கொளத்துார் நெடுஞ்சாலையோரம் குவிந்த சுற்றுலா பயணியர், நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று நுழைவுச்சீட்டு பெற்று பூங்காவுக்கு சென்றனர். நுழைவு கட்டணம், 10 ரூபாய், மொபைல் போனுக்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. நேற்று மட்டும், 9,405 சுற்றுலா பயணியர் பார்வையிட்டனர். பெரும்பாலான பயணியர், குடும்பத்துடன் சுற்றிப்பார்த்தனர். இதன்மூலம் நுழைவு, மொபைல் கட்டணங்கள், பவளவிழா நுழைவு கட்டணம் என, 1,61,150 ரூபாய், நீர்வளத்துறைக்கு வசூலானது. ஆனால் விடுமுறை நாட்களில் அடிக்கடி நீண்ட வரிசை காணப்படுவதால் நுழைவு சீட்டு வழங்க, கூடுதல் கவுன்-டர்களை திறக்க, சுற்றுலா பயணியர் வலியுறுத்தினர்.'குளுகுளு' ஏற்காடுஏற்காட்டிலும் ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், பல்வேறு வியூ பாயின்ட் பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். குறிப்பாக படகு இல்லத்தில், காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணியர், பயணச்சீட்டை வாங்கி நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.மாலையில் சாரல் மழை பெய்ததால், ஏற்காடு, 'குளுகுளு' வென மாறியது. மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணியர் ஏற்காட்டை ரசித்தனர்.