ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்
ஏற்காடு: ஏற்காட்டுக்கு கடந்த வாரம் முழுதும் சுற்றுலா பயணியர் எண்-ணிக்கை குறைவாக இருந்தது. குடியரசு தினம், ஞாயிறான நேற்று, காலை முதலே, ஏற்காட்டுக்கு ஏராளமான சுற்றுலா பய-ணியர் வர தொடங்கினர்.இதனால் அண்ணா, ஏரி உள்ளிட்ட பூங்-காக்களை சுற்றிப்பார்த்தனர். படகு இல்லத்திலும் ஏராளமானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.அதேபோல் பூலாம்பட்டி படகுத்துறையில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் படகுகளில் பயணித்து மகிழ்ந்தனர்.