உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

ஏற்காடு;ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். குறிப்பாக கடந்த மாதம் தீபாவளி பண்டிகையின்போது ஏராளமானோர் குவிந்தனர். அதற்கு பின், அங்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் ஞாயிறான நேற்று, ஏராளமான சுற்றுலா பயணியர் குவிந்தனர். அவர்கள் அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்தனர்.மேலும் படகு இல்லத்தில் காலை முதலே சவாரி செய்ய அதிகளவில் சுற்றுலா பயணியர் காத்திருந்தனர். அவர்கள் பயண சீட்டை வாங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணியர் குவிந்ததால், அங்குள்ள கடைகளில் விற்பனை நன்றாக நடந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேட்டூர் அணை பூங்காமேட்டூர் அணை பூங்காவை நேற்று, 4,484 சுற்றுலா பயணியர் சுற்றிப்பார்த்தனர். இதன்மூலம் ஒருவருக்கு, 5 ரூபாய், மொபைல் கட்டணம் என, 20,570 ரூபாய், பவளவிழா கோபுரத்துக்கு சென்று பார்வையிட்டதன் மூலம் என, மொத்தம், 74,160 ரூபாய் கட்டணம், நீர்வளத்துறைக்கு வசூலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி