உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைப்பாதையில் விபத்து போக்குவரத்து பாதிப்பு

மலைப்பாதையில் விபத்து போக்குவரத்து பாதிப்பு

ஏற்காடு: சேலம் அருகே, வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் மதி, 32. இவர் நேற்று காலை, ஏற்காட்டில் பொக்லைன் மூலம் பணி மேற்-கொண்டார். மதியம், 1:30 மணிக்கு சேலம் புறப்பட்டார். மலைப்-பாதை, 13வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, ஆக்சில் கட்டாகி, ஒரு சக்கரம் தனியே கழன்று ஓடியது. தொடர்ந்து பொக்லைன், 20 அடி பள்ளத்தில், கொண்டை ஊசி வளைவு அடுத்துள்ள சாலையில் விழுந்தது. மதி காயங்களுடன் தப்பினார். அவர், அச்சாலையில் சென்ற வேறு வாகனத்தில் ஏறி, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இச்சம்ப-வத்தால் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்-பட்டது. ஏற்காடு போலீசார், வாகனத்தை துாக்கி நிறுத்திய பின், போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரி-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை