உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெள்ளப்பெருக்கில் சேதம் அடைந்த தரைப்பாலம் மக்களே சீரமைத்ததால் போக்குவரத்து தொடக்கம்

வெள்ளப்பெருக்கில் சேதம் அடைந்த தரைப்பாலம் மக்களே சீரமைத்ததால் போக்குவரத்து தொடக்கம்

வீரபாண்டி: வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தில் அதிகளவில் சேதம் ஏற்பட்டு, 10 அடி வரை பள்ளம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. அப்பகுதி மக்களே இணைந்து, மண் கொட்டி தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொண்-டதால் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே இனாம் பைரோஜி ஊராட்சி, புதுப்பாளையத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டம் மின்-னக்கல் வழியே, வெண்ணந்துார், ராசிபுரம் செல்லும் சாலை உள்-ளது. அதில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே, 40 ஆண்டுக்கு முன் கட்டிய தரைப்பாலத்தின் தடுப்புகள் உடைந்து, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்திருந்தது. கடந்த, 3 மாதங்களுக்கு முன், நாமக்கல் மாவட்ட எல்லையில், தரைப்பாலத்தின் இணைப்பு பகுதியில் பள்ளம் விழுந்து, பாதசா-ரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும், தரைப்பாலத்தை பயன்படுத்தினர். கடந்த, 1 முதல், 4 நாட்கள் பெய்த தொடர் மழையால் திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், அரிக்-கப்பட்ட பகுதி மேலும் விரிவடைந்து தரைப்பால இணைப்பு துண்டிக்கப்பட்டு, 10 அடி துாரத்துக்கு இடைவெளி ஏற்பட்டது.இதனால், 25 நாட்களாக, தரைப்பாலத்தை ஒட்டிய இரு மாவட்ட விவசாயிகள் வழியின்றி தவித்தனர். சம்பந்தப்பட்ட நெடுஞ்சா-லைத்துறையினர், புதிதாக உயர்மட்ட பாலம் கட்ட அனுமதி கேட்டு சென்னைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் தரைப்-பாலம் பலவீனமாக உள்ளதால் சீரமைக்க முடியாது; தேவைப்-பட்டால் மக்களே சொந்த செலவில் தற்காலிக நடவடிக்கை எடுத்-துக்கொள்ளலாம் என, வாய்மொழி ஒப்புதல் கொடுத்தனர். இதனால் பிச்சம்பாளையம், புதுப்பாளையம், அரசம்பாளையம் உள்ளிட்ட தரைப்பாலத்தை சுற்றியுள்ள விவசாயிகள், மக்கள், நேற்று காலை, அவரவர் டிராக்டர்கள், பொக்லைன் மூலம், காலி நிலத்தில் இருந்து மண் வெட்டி எடுத்து வந்து, தரைப்பால இடைவெளியில் கொட்டி, பாலத்தை சமன்படுத்தினர். தொடர்ந்து, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் மட்டும் சென்று வரும்படி, போக்குவரத்து தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி