உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுரங்கப்பாலத்தில் சிக்கிய லாரி மீட்பு

சுரங்கப்பாலத்தில் சிக்கிய லாரி மீட்பு

ஆத்துார்: நரசிங்கபுரம், பழைய வீட்டு வசதி வாரியம், திட்டா நகர் வழியே, சேலம் - விருதாசலம் அகல ரயில் பாதை செல்கிறது. திட்டா நகரில் ரயில்வே சுரங்கப்பாலம் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த கன மழையால், அந்த பாலத்தில், 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றது. இந்நிலையில் கடலுாரில் இருந்து, கோவை நோக்கி 'பர்னிச்சர்' ஏற்றிச்சென்ற லாரி, நேற்று, அந்த பாலம் வழியே வந்து மழைநீரில் சிக்கிக்கொண்டது. டிரைவர் சிலம்பரசன், லாரியை இயக்க முடியாமல் தவித்தார். பின் அவர், 'கிரேன்' இயந்திரம் வரவழைத்து, 3 மணி நேரத்துக்கு பின் லாரியை மீட்டு ஓட்டிச்சென்றார். ஆனால் அங்கு மழைநீர் தேங்காதபடி பாதுகாப்பு பணி மேற்கொள்ள, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை