மேலும் செய்திகள்
கரைபுரளுது லஞ்ச 'ஆறு' கடிவாளம் போடுறது யாரு?
21-Oct-2025
இடைப்பாடி: இடைப்பாடி நுகர்பொருள் கிடங்கில், துவரம் பருப்பு மூட்டைகளை இறக்குவதில் சரியான திட்டமிடலின்றி அதிகாரிகள் செயல்படுவதால், 12 நாட்களாக, 500 டன்னுக்கு மேற்பட்ட பருப்பு மூட்டைகளுடன், லாரிகளை சாலையோரம் நிறுத்தி, டிரைவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம், இடைப்பாடியில், தமிழக நுகர்பொருள் வாணிப கிடங்கு கிளை கிடங்கிற்கு, 10 சக்கர லாரிகளில், 19 டன்; 12 சக்கர லாரிகளில், 25 டன்; 14 சக்கர லாரிகளில், 30 டன் என்ற அளவுகளில், 500 டன்னுக்கு மேற்பட்ட துவரம் பருப்பு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இந்த மூட்டைகள் கிடங்கில் இறக்கப்படாமல், 12 நாட்களாக, இடைப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில், சாலையோரம் நிறுத்தி, டிரைவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி லாரி டிரைவர் வெங்கடாசலம் கூறுகையில், ''குஜராத்தில் இருந்து துவரம் பருப்பு மூட்டைகளை லாரியில் ஏற்றி வந்தேன். ஐந்து நாட்களாக அதிகாரிகள் இறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ' 'லாரியில் பருப்பு உள்ளதால், இதை விட்டு எங்கும் செல்ல முடியவில்லை,'' என்றார். சேலம் லாரி டிரைவர் கனகராஜ் கூறுகையில், ''தீபாவளிக்கு முன் இங்கு வந்தேன். 12 நாட்களாக காத்திருக்கிறேன். இன்னும் லோடு இறக்கவில்லை,'' என்றார். இடைப்பாடி கிடங்கு தர கட்டுப்பாட்டு ஆய்வாளர் கொழுஞ்சியப்பனிடம் கேட்டபோது, ''ரேஷன் கடைகளுக்கு அடுத்த மாத அட்வான்ஸ் அரிசி வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். ' 'அந்த அரிசி மூட்டைகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய பின் தான், இந்த பருப்புகளை, கிடங்கில் இறக்க முடியும். சில லாரிகளில் உள்ள பருப்புகளின் தரத்தை ஆய்வு செய்து, பின், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளதால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன,'' என்றார். தொடர்ந்து, நேற்று மாலை, அவசரமாக சில லாரிகளில் இருந்த துவரம் பருப்புகளை, இறக்கி வைக்கும் பணியை, அதிகாரிகள் துவங்கினர்.
21-Oct-2025