உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓடும் பஸ்சில் மொபைல் லவட்டிய இருவர் கைது

ஓடும் பஸ்சில் மொபைல் லவட்டிய இருவர் கைது

சேலம்: சேலத்தில் ஓடும் பஸ்சில், மொபைல்போன் திருடிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.சேலம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சந்த்ரு, 31; புது பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐந்து ரோட்டுக்கு, டவுன் பஸ்சில் நேற்று முன்தினம் சென்றார். அருகில் நின்ற நபர், இவருடைய பாக்கெட்டில் இருந்த மொபைல்போனை திருடி, அருகில் உள்ளவரிடம் கொடுத்துள்ளார். இது தெரியவே சக பயணிகளுடன் சேர்ந்து, இருவரையும் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் சேலம், இரும்பாலை, புது ரோடு சுகுமார், 31; ஈரோடு மாவட்டம் சித்தோடு அந்தோனி, 36, என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ