| ADDED : ஜூன் 03, 2024 07:07 AM
சேலம் : சேலத்தில், தறி தொழிலாளி வீட்டை அடித்து நொறுக்கிய கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.சேலம், அழகாபுரம் தண்ணீர்தொட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, 40, தறி தொழிலாளி. இவர் கடந்த, 30 இரவு, 8:00 மணிக்கு தன் வீட்டின் முன், நண்பர் நல்லதம்பியுடன் பேசிக் கொண்டு இருந்தார். அந்த வழியாக வந்த ரவுடி சுப்பிரமணி, நல்லதம்பியிடம் தகராறில் ஈடுபட்டார். இதை கந்தசாமி தட்டி கேட்டுள்ளார். பின் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி உள்பட நான்கு பேர் சேர்ந்து, அன்று நள்ளிரவு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கந்தசாமி வீட்டின் கதவு, ஜன்னல்களை சேதப்படுத்தினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.அழகாபுரம் போலீசார் விசாரித்து சுப்பிரமணி, பெரியபுதூரை சேர்ந்த பிரசாத், 26, காட்டூரை சேர்ந்த தினேஷ்குமார், 24, உள்பட நான்கு பேர் மீது வழக்கு பதிந்தனர். நேற்று முன்தினம் பிரசாத், தினேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.