மேலும் செய்திகள்
தொழிலாளியை தாக்கிய 2 சிறுவர்கள் மீட்பு
14-Oct-2025
ஆத்துார், திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் ராமசாமி, 63. இவருக்கு சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே அக்கிசெட்டிபாளையத்தில், 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை, அக்கிசெட்டிபாளையத்தை சேர்ந்த சன்னாசி, 45, குத்தகைக்கு ஓட்டுகிறார். அவர், அவரது மனைவி ஜெயந்தி, இரு மகன்களுடன், அதே நிலத்தில் உள்ள வீட்டில் வசிக்கின்றனர்.கடந்த, 19 நள்ளிரவு, 12:30 மணிக்கு, 'பொக்லைன்' இயந்திரத்துடன் வந்த, 10க்கும் மேற்பட்டோர், அந்த வீட்டு சுவரின் ஒரு பகுதியை இடித்தனர்.வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். இதுகுறித்து ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்து, சொக்கநாதபுரத்தை சேர்ந்த, பொக்லைன் டிரைவர் சபரி பிரசாந்த், 26, செல்லியம்பாளையம் விஜய்வேல், 42, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.அவர்களிடம், எதற்காக இடித்தனர் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் மற்றவர்களை தேடுகின்றனர்.
14-Oct-2025