மேலும் செய்திகள்
மொபைல் கடையில் தீ: ரூ.3 லட்சத்துக்கு சேதம்
15-Aug-2025
ஓமலுார், மது போதை தகராறில், பீர் பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.இடைப்பாடியை சேர்ந்தவர் ராகுல், 26, பெயின்டர். இவர் நேற்று முன்தினம், ஓமலுார் அருகே காமலாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பின் செல்வகுமார், அருள்மணி ஆகிய உறவினர்களுடன், காமலாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிய பின், எதிரே ரோட்டோரத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.அப்போது பொட்டியபுரத்தை சேர்ந்த விக்னேஷ், 19, என்ற வாலிபர் பக்கத்தில் அமர்ந்து மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் விக்னேஷ் மதுபாட்டிலால் ராகுல், செல்வகுமார் ஆகியோரை குத்தினார். இதில் காயமடைந்த இருவரும், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ராகுல் அளித்த புகார்படி, ஓமலுார் போலீசார் விக்னேைஷ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
15-Aug-2025