உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுகின்றன

சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுகின்றன

வீரபாண்டி: துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம் சார்பில் ஆட்டையாம்பட்டியில், 3 ஆண்டு, தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் வெண்ணிலா தலைமை வகித்தார்.அதில், சேலம் எம்.பி., செல்வகணபதி பேசுகையில், ''ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் தேர்தலின்போது சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன,'' என்றார்.தலைமை பேச்சாளர் மோகநிதி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலர் தருண், கிழக்கு மாவட்ட துணை செயலர்கள் சுரேஷ்குமார், கோமதி, ஆட்டையாம்பட்டி செயலர் முருகபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை