| ADDED : நவ 18, 2025 01:46 AM
சங்ககிரி, மகுடஞ்சாவடி அருகே, பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பஞ்சு மிட்டாய் வியாபாரியை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, அ.தாழையூரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இங்கு நேற்று உத்தரபிரதேசம் மாநிலம், கிராம்ரஹ்மத்பூர் பகுதியை சேர்ந்த ஜகதீஸ்குமார் மகன் விஷ்ணுகுமார், 22, என்பவர் பஞ்சு மிட்டாய் விற்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவி, பஞ்சுமிட்டாய் வாங்க வந்துள்ளார். அப்போது விஷ்ணுகுமார், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி, அருகில் உள்ள தென்னந்தோப்பு பகுதிக்கு கூட்டி சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மாணவி கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள், பஞ்சு மிட்டாய் விற்ற வாலிபரை பிடித்து, 'தர்மஅடி' கொடுத்தனர். இது குறித்து மாணவியின் தாய், சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரித்து, போக்சோ சட்டத்தின் கீழ் விஷ்ணுகுமாரை கைது செய்தனர்.