உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் அடித்துச்சென்ற பாலம்உடனே சீரமைக்க வலியுறுத்தல்

ஏற்காட்டில் அடித்துச்சென்ற பாலம்உடனே சீரமைக்க வலியுறுத்தல்

ஏற்காடு, டிச. 22-ஏற்காட்டில் இருந்து, 8 கி.மீ.,ல், புத்துார் மலைக்கிராமம் உள்ளது. அங்குள்ள ஆற்றுப்பாலம், பெஞ்சல் புயலின்போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்சென்றது. இதனால் புத்துார் அடுத்துள்ள அரண்மனை காடு, பாறை கடை, புளியங்கடை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், பாலத்தை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மாறாக வெகுதுாரம் சுற்றிச்சென்று சிரமத்துக்கு ஆளாகினர். அதிகாரிகள் ஆய்வு செய்து புது பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என, தெரிவித்தனர். ஆனால், 20 நாட்களுக்கு மேலாகியும், அதற்கான எந்த பணியும் தொடங்கப் படவில்லை. வேறு வழியின்றி கிராம மக்கள், பாலத்தின் ஓரம் மரக்கட்டைகளை அடுக்கி வைத்து சிறு அளவில் பாலம் அமைத்துள்ளனர். அதில் ஆபத்தான முறையில் பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரும், அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்கின்றனர். இதனால் அதிகாரிகள் புது பாலம் கட்ட, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலைக்கிராம மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை