உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பல்கலை வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக வேந்தர் செயல்பட வலியுறுத்தல்

பல்கலை வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக வேந்தர் செயல்பட வலியுறுத்தல்

சேலம்: சேலத்தில், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. கவுரவ தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்.அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளுக்கு இணங்கி, பல்கலை வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக வேந்தர் செயல்படுதல்; சங்கத்தை சேர்ந்த, 76 பேர் மீதான துணைவேந்தரின் பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்தல்; ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபணமான, முன்னாள் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுக்கு, 40 லட்சம் ரூபாய் வழங்கியவர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்தல் என்பன உள்பட, 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பு செயலர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் சுசீலா, பொதுச்செயலர் சக்திவேல், பொருளாளர் பாண்டியராஜன், பாரதியார், திருவள்ளுவர் பல்கலை தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை