உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரத்து குறைந்ததால் காய்கறி விலை கிடு கிடு உயர்வு முருங்கைக்காய் கிலோ ரூ.400; தக்காளி கிலோ ரூ.80

வரத்து குறைந்ததால் காய்கறி விலை கிடு கிடு உயர்வு முருங்கைக்காய் கிலோ ரூ.400; தக்காளி கிலோ ரூ.80

ஆத்துார்:தொடர் மழை காரணமாக, காய்கறி வரத்து குறைந்துள்ளதால், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள, தினசரி காய்கறி மார்க்கெட், தமிழகத்தின் இரண்டாவது பெரிய மார்க்கெட்டாக உள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், விற்பனைக்கு வருகிறது. பருவ மழை பெய்து வருவதால், காய்கறி செடிகளில் பூக்கள் உதிர்ந்து வருகின்றன.இதனால், தலைவாசல் மார்க்கெட்டிற்கு, காய்கறி வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துள்ளதாலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடப்பதால், காய்கறி தேவையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து, காய்கறி வியாபாரி சீனிவாசன் கூறியதாவது:பருவ மழைக்கு பின், காய்கறி வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ, 80 முதல், 100 ரூபாயாக இருந்த முருங்கைக்காய், நேற்று, 320 ரூபாயாக உள்ளது. வெளிமார்க்கெட்டில், கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம், கிலோ, 20 முதல், 30 ரூபாய்க்கு விற்ற தக்காளி, உள்ளூர் வரத்து குறைந்ததால், நேற்று முன்தினம், 70 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று கிலோ 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.தக்காளி வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம், கிலோ 20 ரூபாயாக இருந்த கறிவேப்பிலை, கிலோ 60 ரூபாய்; கத்தரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், பச்சமிளகாய் உள்ளிட்ட காய்கறிகள், கடந்த வாரத்தை விட, கிலோவுக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. காளான் தேவையும் அதிகரித்துள்ளதால், கடந்த வாரம் கிலோ, 225 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று கிலோ, 350 ரூபாயும், பாக்கெட் அளவில், 50 ரூபாயாக இருந்த நிலையில், 70 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து, மழை பெய்து வந்தால் காய்கறி விலை மேலும் உயரும். இவ்வாறு கூறினார்.சின்னவெங்காயம்தொடர் மழை காரணமாக, இருப்பு வைத்துள்ள சின்ன, பெரிய வெங்காயம் அழுகல் ஏற்பட்டு வருகிறது. சின்னவெங்காயம் வரத்து குறைந்துள்ளதால், கடந்த வாரத்தில், கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று, கிலோ, 50 முதல், 60 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம் கிலோ, 30 ரூபாயாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை