உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓட்டு எண்ணும் மையத்தில் வாகனங்களுக்கு தடை

ஓட்டு எண்ணும் மையத்தில் வாகனங்களுக்கு தடை

சேலம் : சேலம் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.அதற்கு தலைமை வகித்து கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: ஓட்டு எண்ணிக்கை, கருப்பூர் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் ஜூன், 4 காலை, 8:30 மணிக்கு தொடங்க உள்ளது. அப்போது முகவர்கள், மொபைல் போன், ஐ பேட், லேப்டாப், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்கள் எடுத்து வரக்கூடாது. வாகனங்களையும், ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில் அனுமதிக்கப்படாது.மையத்தில் தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளபடி வேட்பாளர்கள், முகவர்கள், அவரவர் இடங்களில் அமர வேண்டும். தபால் ஓட்டுகள், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் எண்ணப்படும். சுற்றுவாரியான விபரங்கள் ஒலிபெருக்கி, மின்னணு திரை மூலம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஜெகநாதன்(பொது), சிவசுப்ரமணியன்(தேர்தல்) உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ