மேலும் செய்திகள்
சாய்ந்து கிடக்கும் பெயர் பலகை
02-May-2025
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலையில் இருந்து மல்லசமுத்திரம் செல்லும் சாலையில், ஒரு மாதத்திற்கு முன், காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. ஆனால், இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் திறந்துவிடும்போதெல்லாம், பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. அங்கு தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால், பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும், இங்கிருந்து கருங்கல்பட்டி, சோமணம்பட்டி, பருத்திப்பள்ளி, ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தண்ணீர் செல்கிறது. குழாய் உடைந்துள்ளதால், போதிய அழுத்தமின்றி குறைந்தளவு தண்ணீரே செல்கிறது. இதனால் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது, கோடைகாலம் என்பதால் காவிரியாற்றில் தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது. இந்த சமயத்தில் குடிநீர் குழாய் உடைந்துள்ளதால், மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து உடைந்த குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
02-May-2025