உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நில புரோக்கரை தாக்கிய வெல்டிங் தொழிலாளி கைது

நில புரோக்கரை தாக்கிய வெல்டிங் தொழிலாளி கைது

ஆத்துார்: நரசிங்கபுரம், வடக்கு தில்லை நகரை சேர்ந்தவர் குமரவேல், 37. நில புரோக்கரான இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார். அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், 37, வீடு அருகே வெல்டிங் தொழில் செய்கிறார். அங்கு அதிகளவில் சத்தம் வருவதாக, குமரவேல் கேட்டார். இதில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், இரும்பு கம்பியால் குமரவேலை தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து குமரவேல் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் நேற்று, ரவிச்சந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை