மேலும் செய்திகள்
சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள்
19-Dec-2024
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த குள்ளம்பட்டியில், மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை சார்பில் வீட்டு மனைப்பட்டா, புது ரேஷன் கார்டு, வேளாண் உழவர் நலன், தோட்டக்கலை, பழங்குடியினர் நலன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, கூட்டுறவு, மின்சாரம் உள்ளிட்ட துறைகள் மூலம், 187 பயனாளிகளுக்கு, 78.05 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இதில் சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா உள்பட பலர் பங்கேற்றனர்.
19-Dec-2024