உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவர் வீட்டில் ஒயர்கள் திருட்டு

மருத்துவர் வீட்டில் ஒயர்கள் திருட்டு

சேலம், சேலம் பிரட்ஸ் சாலையை சேர்ந்தவர் கதிர்வேல் குமரன், 48. சேலம் அரசு மருத்துமனையில் மருத்துவராக உள்ளார். இவர் வீடு அருகே, கட்டுமானப்பணி நடந்து வருகிறது. அங்கு கடந்த, 8 நள்ளிரவு, 12:30 மணிக்கு, சில மர்ம நபர்கள் நுழைந்து, கட்டடத்துக்கு தேவையான, 25,000 ரூபாய் மதிப்பில், எலக்ரிக் ஒயர்களை திருடிச்சென்றனர். காலையில் கட்டுமான தொழிலாளர்கள், ஒயர்கள் இல்லாதது குறித்து, மருத்துவரிடம் தெரிவித்தார். அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சேலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி