மேலும் செய்திகள்
கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
09-Nov-2024
சிட்டி க்ரைம்
14-Nov-2024
சேலம்: கடலுார் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் வினிதா, 19. நேற்று முன்தினம் இரவு சிதம்பரத்தில் இருந்து சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்தார். கைக்குழந்தையுடன் வந்த அவர், அங்கும், இங்கும் தடுமாறினார். இதை கவனித்த, பள்ளப்பட்டி போலீசார் சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரித்தனர்.அப்போது அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த இன்பரசனுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டேன். ஒரு மாதத்துக்கு முன், எனக்கு குழந்தை பிறந்தது. அப்போது வேலைக்கு செல்வதாக புறப்பட்ட இன்பரசன், மீண்டும் திரும்பி வரவில்லை. போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது நண்பர், மொபைல் போனில் பேசியபோது, இன்பரசன் சேலத்தில் இருப்பதாக தெரிவித்துவிட்டு, போனை துண்டித்து விட்டார். இதனால் சேலம் வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.போலீசார் விசாரணையில் இன்பரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணை, போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, இன்பரசன் குறித்து விசாரிக்கின்றனர்.
09-Nov-2024
14-Nov-2024