உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட்டில் இருந்து விழுந்த பெண் சுயநினைவு இழந்தார்

மொபட்டில் இருந்து விழுந்த பெண் சுயநினைவு இழந்தார்

கெங்கவல்லி ;மொபட்டில் இருந்து, கீழே விழுந்த பெண் சுயநினைவு இழந்தார்.கெங்கவல்லி அருகே, தகரபுதுாரை சேர்ந்த விவசாயி குமார், 45. இவரது மனைவி கலைச்செல்வி, 36. இவர்கள், நேற்று உறவினர் வீட்டு புதுமனை புகும் விழாவிற்கு, கெங்கவல்லி நோக்கி பைக்கில் சென்றனர். விஜயபுரம் பாலம் அருகில் வந்தபோது, 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட்டில் இருந்து கீழே விழுந்த கலைச்செல்விக்கு, தலை பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. தம்மம்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின், மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் சுயநினைவு இழந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ